லாட்டரி விற்றவருக்கு காப்பு
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, எம்.ஜி.ஆர்., நகர் பஸ் ஸ்டாப் அருகே போலி லாட்டரி விற்ற, பவானியை சேர்ந்த வீரபத்திரன், 53, என்பவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.