அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க துணை பொதுச்செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். அதில், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை உயர் அலுவ-லர்கள் மரியாதை குறைவாக நடத்துவதை கைவிட வேண்டும். ஒருசில மாநகராட்சிகளில் வரிவசூல் பணி ஆய்வு என்ற பெயரில், இரவு, 9:00 மணி வரை ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிட்டு, மாலை, 6:00 மணிக்கு நடத்தி முடிக்க வேண்டும். பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செய-லாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.