உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: மூலக்குறிச்சி அடுத்த காமராஜ் நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்கக்கோரி, இ.கம்யூ.,-மா.கம்யூ., கட்சி-யினர் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சபா-பதி தலைமை வகித்தார். அதில், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை, மூலக்குறிச்சி ஊராட்சி, காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டு-களாக வீடு கட்டி குடியிருந்து வரும், 150க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த பல்வேறு சமூக பொதுமக்களுக்கு, நத்தமாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்க வேண்டும் என, கோஷமிட்டபடி, கலெக்டர் அலு-வலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்புஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை