உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிநீர் சீராக வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

குடிநீர் சீராக வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் பஞ்.,க்குட்பட்ட அண்ணாநகர், டி.எம்., காளியண்ணன் நகர் பகுதியில், அன்றாட தேவைக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும். பழைய ஆழ்துளை கிணறுகளை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 2,000 லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் டேங்கை, இரண்டு இடங்களில் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில், ஆனங்கூர் மற்றும் அண்ணா நகர் கிளை சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி