உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜன.,10ல் சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜன.,10ல் சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட், மானிய கோரிக்கையின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது வரை அதற்கான அரசு உத்தரவு வெளியிடவில்லை. தற்போது இந்தாண்டுக்கான கரும்பு அரவை பருவம் தொடங்கியுள்ள நிலையில், கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் மூலம் பழைய கிரைய தொகையான கரும்பு டன் ஒன்றுக்கு, 3,290.50 ரூபாய் மட்டும் தான் மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கரும்புக்கு உடனடியாக டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் அரசு உத்தரவு வழங்கக்கோரியும், இதுவரை வழங்காத தி.மு.க., அரசை கண்டித்தும் ஜன., 10 காலை 11:00 மணிக்கு மோகனுார் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை