உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மா.செ., மீது அவதுாறு நடவடிக்கை எடுக்க மறியல்

மா.செ., மீது அவதுாறு நடவடிக்கை எடுக்க மறியல்

ராசிபுரம், ராசிபுரம் அருகே, பிள்ளாநல்லுார் டவுன் பஞ்., 5-வது வார்டு பகுதியில் கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அது சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. ஆனாலும், பொதுமக்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று மாலை இப்பகுதி வி.சி.க., மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமாரை அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து கேள்வி பட்ட அப்பகுதி, தி.மு.க., நிர்வாகிகள், எம்.பி.,யை அவதுாறாக பேசியவரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, 50க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் பிள்ளாநல்லுார் பஸ் ஸ்டாப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'அவதுாறாக பேசியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியலால், திருச்செங்கோடு பிரதான சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி