மேலும் செய்திகள்
காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
10-Oct-2026
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடந்த மாதம் மேற்குவங்க மாநிலம், கோல்கத்தாவில் நடைபெற்ற, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் கூட்டத்தில் புகுந்து, வன்முறையில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, மேற்குவங்க அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்பாளரும், நாமக்கல் மாவட்ட தலைவருமான சபரிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
10-Oct-2026