உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஹெல்மெட் அணிந்து பயணித்த ஓட்டுனர்களுக்கு மோர் வழங்கல்

ஹெல்மெட் அணிந்து பயணித்த ஓட்டுனர்களுக்கு மோர் வழங்கல்

நாமக்கல்,நாமக்கல்லில், ஹெல்மெட் அணிந்து பயணித்த இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீஸார் மோர் வழங்கினர்.நாமக்கல்லில் ஏற்படும் வாகன விபத்து மற்றும் போக்குவரத்தை பாதிப்பை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை, டி.பி., பாயின்ட், அண்ணாதுரை சிலை, பரமத்தி-கோட்டை சாலை பிரிவு, உழவர் சந்தை, சேலம் சாலை பிரிவு உள்ளிட்ட சிக்னல் பகுதியில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், எஸ்.ஐ.,க்கள் குணசிங், வெங்கடேசன் உள்ளிட்ட போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ெஹல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு இலவச மோர் வழங்கினர். ெஹல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாலை விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை பட்டியல் குறித்து எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ