உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் ரூ.12 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் ரூ.12 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் ஆணையம் மூலம், 70 பயனாளிகளுக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்-திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், தமிழ்நாடு மாநில சிறு-பான்மையினர் ஆணையக்குழு கலந்துரையாடல் கூட்டம் நடந்-தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலாளர் சம்பத், துணைத்தலைவர் அப்துல் குத்துாஸ், ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.எ.ல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலா-நிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், பொருளாதா-ரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்த மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினர்களின் நலன்களை பேணி காக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்-கவும், 1989ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.இந்த ஆணையம் சிறுபான்மையினரின் பிரச்னைகளை கண்ட-றியும் பொருட்டு மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளை பார்வை-யிட்டு நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்திட, அரசுக்கு தக்க பரிந்துரைகளை செய்து வருகிறது.முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின், நாமக்கல் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம், 252 பய-னாளிகளுக்கு பல்வேறு சிறுதொழில் தொடங்க, 38.90 லட்சம் ரூபாய் கடனுதவி, கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம், 49 பயனாளிகளுக்கு, 9.60 லட்சம் ரூபாய் கடனுதவி, தமிழ்நாடு சிறு-பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுகழகம் (டாம்கோ) சார்பில், 499 பயனாளிகளுக்கு, 3.01 கோடி ரூபாய் குழு கடன், 172 பயனாளிகளுக்கு, 90.63 லட்சம் ரூபாய் மதிப்பில் தனி நபர் கடனுதவி என, மொத்தம், 671 பயனாளிகளுக்கு, 3.92 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, டாம்கோ சார்பில், 16 பயனாளிகளுக்கு, 7.36 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் கடனுதவி, 16 நபர்களுக்கு கிறிஸ்தவ நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட, 70 பயனாளிகளுக்கு, 12.03 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்-திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் வழங்கினார்.மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஹேமில்டன் வெல்சன், சொர்ணராஜ், நாகூர் நஜிமுதீன், பிரவீன்குமார் தாட்-டியா, ராஜேந்திரபிரசாத், முகமதுரபி, வசந்த், நாமக்கல் மாநகர துணை மேயம் பூபதி, டி.ஆர்.ஓ., சுமன் உள்ளிட்டோர் கலந்து-கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை