மேலும் செய்திகள்
கூடுவாஞ்சேரி நகராட்சியில் நீர்மோர் வழங்கல்
18-Apr-2025
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட, 1, 7, 8, 10வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கழிவுநீர் கால்வாய் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்செங்கோடு நகராட்சி சார்பில், சூரியம்பாளையம் பகுதி வழியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சூரியம்பாளையம், சட்டையம்புதுார், ராஜாகவுண்டம்பாளையம் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, மாற்றுப்பாதை வழியாகத்தான் கால்வாய் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி மவுன ஊர்வலம் சென்று, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, ''கோரிக்கைகளை மனுவாக எழுதிக்கொடுங்கள்; பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்தனர். ஆனால், சமாதானம் ஆகாத பொதுமக்கள், ஈரோடு-வேலுார் ரோடு சந்திப்பில், சின்ன ஓங்காளியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கோரிக்கைகளை நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியல் செய்யக்கூடாது என, தெரிவித்ததை அடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
18-Apr-2025