உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆதார் சேவை மையம் துவங்க பொதுமக்கள் வேண்டுகோள்

ஆதார் சேவை மையம் துவங்க பொதுமக்கள் வேண்டுகோள்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனில், 15 பஞ்., பகுதிகள் உள்ளன. இந்த பஞ்., பகுதியில் வசிக்கும் மக்கள் ஆதார் கார்டு புதுப்பித்தல், புகைப்படம் மாற்றம் செய்தல், புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், முகவரி, மொபைல் எண் மாற்றம், இணைத்தல் உள்ளிட்ட, ஆதார் தொடர்பான அனைத்து பணிகளுக்கும், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும். இதனால் கடைக்கோடியில் உள்ள புதுப்பாளையம், காடச்சநல்லுார், கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், சமயசங்கலி, பாதரை உள்ளிட்ட பெரும்பாலான பஞ்., மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தாலுகா அலுவலகம் சென்றாலும் ஒரே நாளில் பணிகள் முடிவதில்லை. மறுநாள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.மேலும், குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பல அடிப்படை பிரச்னைகளுக்கு தினமும் ஏராளமான மக்கள் யூனியன் அலுவலகத்திற்கு வருகின்றனர். எனவே, பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்திலேயே ஆதார் சேவை இருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆதார் பணிக்கு என தனியாக குமாரபாளையம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். யூனியன் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை