உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அதிகரிக்கும் பனிப்‍பொழிவு பொதுமக்கள் கடும் அவதி

அதிகரிக்கும் பனிப்‍பொழிவு பொதுமக்கள் கடும் அவதி

.வெண்ணந்துார்: வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவால், மக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் அக்., முதல் டிச., வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவ மழையில் தான், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது அதிகாலையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. வட-கிழக்கு பருவமழை முடிந்த பிறகு தான் பனிப்-பொழிவு இருக்கும். ஆனால், பருவமழை சீசனி-லேயே பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை, 3:00 மணி முதல் காலை, 8:00 மணி வரை பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது.இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளா-கின்றனர். இதையொட்டி, வெண்ணந்துார் பகுதி கடைகளிலும் ஸ்வெட்டர், குல்லா, மப்ளர் உள்-ளிட்ட குளிர்கால ஆடைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலை போன்ற சாலைகளில், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாதபடி பனி மூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை