மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்
20-Dec-2025
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
20-Dec-2025
இயற்கை உரம் தயாரிப்பு மாணவர்கள் செயல்விளக்கம்
20-Dec-2025
நுாலகம் திறப்பு விழா
20-Dec-2025
கந்தசாமி கோவிலில் அமாவாசை வழிபாடு
20-Dec-2025
எருமப்பட்டி: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தில் ஓடுகள் மாற்றி ஓராண்டு கூட ஆகாத நிலையில், மழைநீர் கசிவதாக புகார் எழுந்துள்ளது.எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, 5 வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்கள் அனைத்தும், 40 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு பள்ளி கட்டடத்தில் மட்டும் மழை காலங்களில் தண்ணீர் கசிந்து வந்தது. இதை சரி செய்ய வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, கடந்தாண்டு ஊராக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் யூனியன் நிதி, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இந்த கட்டடத்தின் மேற்கூரையை அகற்றி விட்டு புதிய ஓடுகள் பதிக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணி நடந்தது. ஆனால், பணிகள் முடிந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், தற்போது, பெய்த கன மழையில் புதிதாக பதிக்கப்பட்ட ஓடுகளில் இருந்து தண்ணீர் கசிந்து வருகிறது. இந்த கட்டடத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025