இன்று ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ராசிபுரம், ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின், 2025---26ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, இன்று நடக்கிறது. இச்சங்கத்தின் புதிய தலைவராக சுரேந்திரன், செயலாளராக மஸ்தான், பொருளாளராக ஜெயக்குமார் உள்ளிட்டோர் பதவி ஏற்க உள்ளனர்.ராசிபுரம் பட்டணம் சாலை, சரவணா மஹாலில் இந்த விழா நடக்கிறது. சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆலோசகர் சுந்தரலிங்கம், கோவை ஆக்குருதி ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், ரோட்டரி மாவட்டம் (3206) உதவி ஆளுநருமான டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் பங்கேற்று புதிய நிர்வாகிகள் மற்றும் பிற நிர்வாகிகளுக்கு பதவி ஏற்று வைக்கின்றனர். மண்டல உதவி ஆளுநர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.