வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு
பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், ஆண்டுதோறும் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதனை பயன்படுத்தி சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பள்ளிப்பாளையத்தில் மோளகவுண்டம்பாளையம், எலந்தகுட்டை, சின்னார்பாளையம், தெற்குபாளையம், களியனுார், சமயசங்கிலி, ஆலாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில், 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.இந்தாண்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் டிச., 31 வரை தண்ணீர் வரும். வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து குமாரபாளையம் நீர்வளத்துறை அதிகாரி கூறுகையில், 'மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் பாசனத்திற்கு, 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது பருவமழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வாய்க்காலில், 300 கன அடி தண்ணீர் வருகிறது,' என்றனர்.