உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டுமனை தோராய பட்டா வழங்க கோரிக்கை

வீட்டுமனை தோராய பட்டா வழங்க கோரிக்கை

மல்லசமுத்திரம்;மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 4வது வார்டு, காளிப்பட்டி மதுரைவீரன் தெரு பகுதியில், 37 குடியிருப்புகளில், 150க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த, 1996ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஹெச்.எஸ்.டி., பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டா மூலம் மக்கள் வங்கிகளில் கடன் பெற முடியாமலும், பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்த பட்டாவை மாற்றிவிட்டு, வீட்டுமனை தோராய பட்டா வழங்க வேண்டும் என மக்கள் பலமுறை கிராமசபை கூட்டத்திலும், அதிகாரிகளிடத்திலும் வலியுறுத்தி இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு, வீட்டுமனை தோராய பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை