உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உயிர் பலி வாங்கிய பாழிக்கு வேலி அமைக்க கோரிக்கை

உயிர் பலி வாங்கிய பாழிக்கு வேலி அமைக்க கோரிக்கை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ரங்கனுார் நால்ரோடு பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோவில் அருகே பாழி உள்ளது. இந்த பாழியின் ஆழம், 15 அடிக்கு மேல் இருக்கும். தண்ணீர் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். பெற்றோருடன் கோவிலுக்கு வந்த விஷாந்த், 8, என்ற சிறுவன், இந்த பாழி அருகில் விளையாடி கொண்டிருக்கும் போது தவறிவிழுந்து இறந்தார். வெப்படை தீயணைப்பு வீரர்கள், பாழியில் இருந்து சிறுவனை சடலமாக மீட்டனர். எனவே, பாதுகாப்பு கருதி, இந்த பாழியை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ