மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
30-Jul-2025
நாமக்கல், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமிநரசிம்மன், வட்ட செயலாளர் பூபதி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.அதில், நீண்ட நாள் கோரிக்கையான, வி.ஏ.ஓ., பணிக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்; 10 ஆண்டு பணி முடித்தோருக்கு, தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும்; 20 ஆண்டு பணி முடித்தோருக்கு, சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும் பெயர் மாற்றம் செய்து, அதற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ராசிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் சரவணன், சேந்தமங்கலத்தில், வட்ட தலைவர் குணசேகரன், மோகனுாரில், வட்ட தலைவர் அன்புராஜ், திருச்செங்கோட்டில், வட்ட தலைவர் முருகன், ப.வேலுாரில், வட்ட தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
30-Jul-2025