உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பழுதடைந்த மோட்டாரை சரி செய்ய வேண்டுகோள்

பழுதடைந்த மோட்டாரை சரி செய்ய வேண்டுகோள்

எலச்சிபாளையம், பெரியமணலி, அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில், பழுதடைந்து காணப்படும் மின் மோட்டாரை சரி செய்ய வேண்டும்.எலச்சிபாளையம் யூனியன், பெரியமணலி பஞ்., 2வது வார்டு அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள, குடிநீர் இணைப்பு மின் மோட்டாரில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பழுது ஏற்பட்டது.இதனால் மக்கள் போதிய குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். வேறு வழியில்லாமல், கடைகளில் விற்கக்கூடிய மினரல் வாட்டரை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் மின் மோட்டாரை சரி செய்து, சீரான குடிநீர் வழங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை