மேலும் செய்திகள்
மின் கம்பங்களால் போக்குவரத்து நெரிசல்
19-Sep-2025
குமாரபாளையம்: குமாரபாளையம் - சேலம் சாலை, கத்தேரி பிரிவு முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை, இரண்டு கி.மீ., துாரத்திற்கு, நெடுஞ்சாலைத்-துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.அப்போது, சாலையோரம் இருந்த மின் கம்பங்கள் அகற்றப்ப-டாமல், அப்படியே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் அந்த மின் கம்பங்கள் தற்போது சாலை நடுவே இருக்-கும்படியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. இதுகு-றித்து மின்வாரியத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரி-வித்தும் பலனில்லை.கம்பங்கள், சாலை நடுவே உள்ளதால், சாலை விரிவாக்கம் செய்தும் பலனில்லை. போக்குவரத்து நெரிசலை சமாளிக்கத்தான் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. எந்த நோக்கத்திற்காக சாலை விரிவாக்கம் செய்யபட்டதோ, அது நிறைவேறவில்லை. பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. மாவட்ட நிர்வாகம் கண்காணித்து, சாலை நடுவே உள்ள மின்கம்-பத்தை அகற்றி, போக்கு வரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19-Sep-2025