உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை

கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதி பாதுகாக்க கலெக்டரிடம் கோரிக்கை

நாமக்கல்: 'குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கிராம மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பத்து ரூபாய் இயக்க ஒன்றிய ஆலோசகர் தத்துவம், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிபட்டி பஞ்., உள்ள ஆதிதிராவிடர் இந்திரா நகர் குடியிருப்புகளில், கழிவுநீர், மழைநீர் தேங்குவதால் குடியிருப்பில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தற்போது, சம்பந்தமில்லாமல் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.அவை சரியானபடி இல்லாததால், அவற்றை ரத்து செய்து, கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலம், ஆதிதிராவிடர் இந்திரா நகர் குடியிருப்பு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ