மேலும் செய்திகள்
மதுரைவீரன் கோவிலில் சிறப்பு அடசல் பூஜை
07-Apr-2025
எலச்சிபாளையம்: திருச்செங்கோடு அருகே, தோக்கவாடியை சேர்ந்தவர் சின்னு-சாமி, 62; விவசாயி. இவர் கடந்த, 23ல் தோட்டத்தில் விளைந்த பச்சை மிளகாயை விற்பனை செய்ய, 'ஆல்டோ' காரில் நாமக்கல் உழவர் சந்தைக்கு சென்றார். நள்ளிரவு, 2:30 மணிக்கு, மாணிக்-கம்பாளையம் அருகே, புள்ளாகவுண்டம்பட்டி, திருமணிமுத்-தாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மூன்று பேர் கும்பல் அவரை வழிமறித்து, 2,400 ரூபாய் பணம், மொபைல் போன், கார் முதலியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். சின்னுசாமி அளித்த புகார்படி, எலச்சிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.மேலும், அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை சோத-னையிட்டனர். அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, எலச்சி-பாளையம் அருகே, இலுப்புலி போயர் தெருவை சேர்ந்த ராஜா மகன் பொன்னுவேல், 24, தங்கவேல் மகன் சஞ்சய், 23, ஜெயபி-ரகாஷ் மகன் ஜூவா, 21, என்பது தெரியவந்தது. நேற்று, இலுப்பு-லியில் சுற்றித்திரிந்த பொன்னுவேல், சஞ்சய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜூவாவை தேடி வருகின்றனர்.
07-Apr-2025