உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டலை தடுக்க சட்டத்தை பலப்படுத்த தீர்மானம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டலை தடுக்க சட்டத்தை பலப்படுத்த தீர்மானம்

நாமக்கல், 'பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுக்க, தமிழக அரசு பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும்' என, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் அடுத்த ஏலுாரில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், ராசிபுரம் புதுச்சேத்திர பிரதேச குழுவின், 3வது மாநாடு நேற்று நடந்தது. மாதர் சங்க நிர்வாகி தனம் கொடியேற்றினார். தலைவர் கோமதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராணி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில செயலாளர் சசிகலா பங்கேற்றார். மாநாட்டில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுக்க, தமிழக அரசு பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது, புகாரளிக்க வரும் பெண்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து, மாதர் சங்க தலைவராக கோமதி, செயலாளராக லட்சுமி, பொருளாளராக தனம், துணை தலைவராக வசந்தா, துணை செயலாளராக புஷ்பலதா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், எலச்சிபாளையத்தில் நடந்த மாதர் சங்க மாநாட்டிற்கு, ஒன்றிய துணை தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் சசிகலா, மாவட்ட தலைவர் ராணி, மாவட்ட துணை செயலாளர் பழனியம்மாள், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி