உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் அரசு கல்லுாரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நாமக்கல் அரசு கல்லுாரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நாமக்கல்,நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்கவும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., அண்ணாதுரை, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எஸ்.பி., விமலா, பேரணியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, மீண்டும் கல்லுாரியில் முடிந்தது.பேரணியில், சாலை விபத்துகளால் ஏற்படும் விளைவுகள்; அவற்றை தடுக்க வேண்டியதன் அவசியம்; விபத்துகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில், சாலை பாதுகாப்பு பயிற்சியாளர் மதுரை நரசிம்ம மணி, ''சாலையை நாம் எவ்வாறு கடக்க வேண்டும்; என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது, விபத்துக்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது,'' என்பது குறித்து திரை மூலம் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !