நாமக்கல் அரசு கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதவர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் பங்கேற்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''மாணவ, மாணவியர் விபத்தில்லா பயணங்களை மேற்கொண்டு அரசுக்கும், சமூகத்திற்கும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார். இறுதியில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட ரெட் கிராஸ் செயலர், போதை தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மன்ற தொடர்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, சாலை பாதுகாப்பு மன்ற உறுப்பினர் சவுந்திரராஜன், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.