உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் ரூ.6.8 கோடியில் உருளை விபத்து தடுப்பான் அமைப்பு

கொல்லிமலையில் ரூ.6.8 கோடியில் உருளை விபத்து தடுப்பான் அமைப்பு

கொல்லிமலை: கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதி-களில் கலெக்டர் உமா, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னு-சாமி, வன பாதுகாவலர் கலாநிதி ஆகியோர், 8.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்ப-ணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதில், கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு சாலையில், 6.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 977 மீட்டர் நீளத்திற்கு உருளை விபத்து தடுப்பான் அமைக்கும் பணிகள் நடந்து வரு-கின்றன. தற்போது, 170 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்-டுள்ளதை பார்வையிட்டார். மீதமுள்ள, 807 மீட்டர் நீளத்திற்கு உருளை விபத்து தடுப்பான் அமைக்கும் பணிகளை குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை