உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெட் சென்டரில் 2,000 ரூபாய் திருட்டு

நெட் சென்டரில் 2,000 ரூபாய் திருட்டு

ராசிபுரம், ராசிபுரத்தில், பட்டப்பகலில் நெட் சென்டரில், 2,000 ரூபாயை திருடி சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம், கடைவீதி பகுதியில் முதல் மாடியில் இன்டர்நெட் சர்வீஸ் சென்டர் உள்ளது. இதன் உரிமையாளர் ஜாபர் மற்றும் 4 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நெட் சர்வீஸ் பணிக்காக அனைவரும் வெளியே சென்றுள்ளனர். ஒரு பெண் ஊழியர் மட்டும் கடையில் இருந்துள்ளார். இந்நிலையில், மாடியில் இருந்து கீழே உள்ள கடைக்கு பெண் ஊழியர் சென்றுள்ளார். இதை பார்த்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், நெட் சென்டரில் புகுந்து மேஜை டிராவை திறந்து அதிலிருந்த, 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுத்துக்கொண்டு தப்பினார்.வெளியே வந்த வாலிபரை பார்த்து பெண் ஊழியர், யார் என கேட்டபோது பக்கத்து கடைக்கு வந்தேன் என கூறி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் அந்த வாலிபர் வேகமாக இறங்கி சென்றுள்ளார். பின்னர் சந்தேகமடைந்து, மேஜை டிராவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது ஒரு வாலிபர் பணம் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ராசிபுரம் போலீசில் ஜாபர் புகார் அளித்துள்ளார். அதேசமயம், வாலிபர் கடையில் புகுந்து பணம் திருடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ