உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குட்கா விற்பனை; 2 கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

குட்கா விற்பனை; 2 கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

பள்ளிப்பாளையம்: ஓடப்பள்ளி பகுதியில் குட்கா விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன், குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் பள்ளிப்பாளையம், ஆயக்காட்டூர், ஓடப்பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.ஆய்வில், ஓடப்பள்ளி பகுதியில் இரண்டு கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் ஒன்றரை கிலோ கைப்பற்றப்பட்டு, தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடைக்கு சீல் வைக்க, மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் பள்ளிப்பாளையம் அருகே, சந்தைபேட்டை பகுதியில் காய்கறி சந்தை நடந்தது. இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை சாயம் பூசி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 20 கிலோ பட்டாணியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை