உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு, டிச. 4-ஈரோட்டில் கனி மார்க்கெட் வணிக வளாக கடைகள், அதை ஒட்டிய வாரச்சந்தை கடைகள் மற்றும் பல்வேறு வீதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது:கடந்த, 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சந்தையில் ஜவுளி விற்பனை மிகவும் குறைந்து காணப்பட்டது. வெளி மாவட்ட மக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் முற்றிலும் வரவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பிற மாநில வியாபாரிகளும் வரவில்லை. குறிப்பாக மொத்த விற்பனை, மொத்த ஆர்டர் முற்றிலும் இல்லை.தற்போது மழை, குளிர் உள்ளதால், அதற்கேற்ப துண்டு, பெட்ஷீட், பெட்ஸ்பிரட், லுங்கி, வேட்டி, புடவை, நைட்டி, உள்ளாடை குறைந்த அளவிலும், ஸ்வெட்டர் வடிவிலான கனத்த ஆடைகளும் விற்றது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை