செம்மண் வெட்டி எடுப்பு கரை உடையும் அபாயம்
செம்மண் வெட்டி எடுப்புகரை உடையும் அபாயம் சேந்தமங்கலம், டிச. 19-சேந்தமங்கலம் யூனியன், அக்கியம்பட்டி பஞ்.,ல் பொன்னார் குளம் ஏரி உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரால் பள்ளம்பாறை, பொம்மசமுத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 4 நாட்களுக்கு முன் பொன்னார் குளத்தின் மேற்கு கறை பகுதியில், 15 அடி ஆழத்திற்கு மர்ம நபர்கள் செம்மண் வெட்டி கடத்தியுள்ளனர். கொல்லிமலையில் பெய்த கனமழையால், இந்த ஏரி நிரம்பி வரும் நிலையில், தற்போது, மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால், ஏரிக்கரை உடையும் நிலை உள்ளது. எனவே, இந்த ஏரிக்கரையில் மண் வெட்டி எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.