மேலும் செய்திகள்
ஏம்பலம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
01-Nov-2025
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
06-Nov-2025
ராசிபுரம்: ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில், ஆர்.சி., துாய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் அறி-வியல் கண்காட்சி நடந்தது. முன்னாள் மாணவி நந்தினி மற்றும் அவரது கணவர் பாலசுப்ரமணியம் ஆகியோர், சிறப்பு விருந்தின-ராக கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளின் படைப்புகளை பள்ளி ஆசிரியை ஜினோ மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ஓய்வுபெற்ற அலுவலர் நமச்சி-வாயன் ஆகியோர் பார்வையிட்டு மதிப்பெண் வழங்கினர்.தேவையற்ற காகித கழிவுகளை கொண்டு பல்வேறு வண்ணங்-களில் காகித பூ உருவாக்கிய மாணவர்களை அனைவரும் பாராட்-டினர்.மேலும், தேச தலைவர்களின் புகைப்படங்கள், அறிவியல் துறையில் சாதித்த விஞ்ஞானிகள் புகைப்படம் வைத்தும், பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், சுவாமி உருவ படங்கள், பல்வேறு வகையான வீட்டு அலங்கார தோரணங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. சிறந்த படைப்புக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.
01-Nov-2025
06-Nov-2025