மேலும் செய்திகள்
விளைச்சல் குறைவால் அரளி விலை உயர்வு
30-Nov-2024
சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டியில், அனுமதியில்லாமல் மண் வெட்டி எடுத்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி வியாழன் வாரச்சந்தை பின்புறத்தில், அரசின் அனுமதியின்றி மண் வெட்டி எடுப்பதாக, காளப்பநாய்க்கன்பட்டி வி.ஏ.ஓ., யுவராணி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சேந்தமங்கலம் போலீசார் வாரச்சந்தை பின் புறத்தில் சென்ற போது, மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் வாகனங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, மண் வெட்ட பயன்படுத்திய 1 பொக்லைன் இயந்திரம், இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
30-Nov-2024