உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; 1,455 பேர் பங்கேற்பு

கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; 1,455 பேர் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களில் காலி-யாக உள்ள, 75 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த, ஆக., 6ல், அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதில் ஆக., 29 வரை, 1,915 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான, 1,837 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஹால் டிக்கெட் அனுமதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், நான்கு மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடந்த எழுத்து தேர்வில், 1,455 பேர் பங்கேற்றனர். 382 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, நாமக்கல் மாவட்ட ஆள்-சேர்ப்பு நிலைய தலைவர் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம், நாமக்கல் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்-புத்துறை அலுவலர் முருகன் ஆகியோர், தேர்வு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை