சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாமக்கல் அரசு கல்லுாரியில் கருத்தரங்கு
நாக்கல், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், 'உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்து. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு உதவி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம், யோகா மற்றும் தியான பயிற்சிகளின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.மேலும், சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளான, 'ஒரே பூமி மற்றும் ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா' என்பதன் வாயிலாக, மனித உடல்நலத்துக்கும், புவியின் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, பல்வேறு வகையான யோகா பயிற்சிகளை செய்து காட்டினார்.கல்லுாரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.