எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில் ஏழு நாள் சர்வதேச கருத்தரங்கு
குமாரபாளையம் :குமாரபாளையம் எக்ஸல் மருந்தியல் கல்லுாரியில், மருந்தாளுநர்களை வடிவமைப்பதில் சிறந்த நடைமுறைகள், வளர்ந்து வரும் போக்குகள் குறித்து, ஏழு நாள் இணையவழி கருத்தரங்கு நடந்தது. தென்கொரியா கியோங்கி பல்கலை முனைவர் ரவிந்திரன், முதல் நாள் உரையுடன் கருத்தரங்கை தொடங்கினார். தொடர்ந்து, ஜெர்மனியிலிருந்து முனைவர் ஆனந்த் ராமசாமி, ஆஸ்திரேலியாவிலிருந்து பாக்ஸ்டர் லேபரேட்டரிஸ் நளின் குமார், மலேசியாவிலிருந்து எய்ம்ஸ் பல்கலை பேராசிரியர் கணேஷ் பாண்டியன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராயல் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை செவிலியர் ஸ்ரீமோள், மலேசியா யு.சி.எஸ்.ஐ., பல்கலை பேராசிரியை சசிகலா சின்னப்பன், ஐக்கிய அரபு அமீரக எம்.பி.சி., மருந்து கிடங்கு மேலாளர் சந்தீப் பெஜ்ஜம் ஆகியோர் பேசினர்.எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், துணை தலைவர் மதன் கார்த்திக் ஆகியோரின் அறிவுறுத்தல்படியும், மருந்தியல் கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் வழிகாட்டுதல்படியும், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கல்லுாரி முதல்வருக்கு, துறைத்தலைவர்கள் ரங்கப்பிரியா, பேராசிரியை அருணா ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.