உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலையில் ஓடும் சாக்கடை சுகாதார சீர்கேடு அபாயம்

சாலையில் ஓடும் சாக்கடை சுகாதார சீர்கேடு அபாயம்

நாமக்கல்: நாமக்கல்-மோகனுார் சாலை, முல்லை பிரிவு சாலையில் இருந்து கொண்டிசெட்டிப்பட்டி வரை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நகர், ராஜாஜி நகர், ஆசிரியர் குடியிருப்பு, பாரதி நகர், எம்.ஜி., நகர், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வசிக்-கின்றனர்.அதேபோல் வர்த்தக நிறுவனங்கள், மாத்திய மாநில அரசு அலுவ-லகங்கள் வழிபாட்டு தலங்கள் உள்ளன.இந்நிலையில், எம்.ஜி., நகரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, அதிலி-ருந்து சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து, 200 மீட்டர் வரை சாலையில் செல்கிறது.அவ்வாறு சாக்கடை செல்வதால் அங்குள்ள குடியிருப்பு மக்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். மேலும், துர்நாற்றத்தால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநக-ராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்-ளாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை