உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஷேர் ஆட்டோக்கள் ஸ்டிரைக்; சிரமத்துக்குள்ளான பயணிகள்

ஷேர் ஆட்டோக்கள் ஸ்டிரைக்; சிரமத்துக்குள்ளான பயணிகள்

நாமக்கல்: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், பயணியர் ஆட்டோ டிரைவர்கள் மிரட்டுவதாக கூறி, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பூங்கா சாலையில் இருந்து, கடந்த, 2014 முதல் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சேலம் சாலை, மோகனுார் சாலை, பரமத்தி சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட வழித்தடங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், முதலைப்பட்டி யில் பயன்பாட்டிற்கு வந்த புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், பயணிகளை ஷேர் ஆட்டோக்கள் ஏற்றி, இறக்கி வந்தன. இதற்கு, 'பயணியர் ஆட்டோ' டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டல் விடுப்பதாக கூறி, ஷேர் ஆட்டோ டிரைவர்கள், திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.இவர்களிடம், இன்ஸ்பெக்டர் கபிலன், போக்குவரத்து அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாலை, ௫:௦௦ மணி ஷேர் ஆட்டோக்கள் இயங்க தொடங்கின. முன்னதாக ஷேர் ஆட்டோ இயங்காததால், புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் பயணிகளும், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை