உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வர் படத்தை எட்டி உதைத்த தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி

முதல்வர் படத்தை எட்டி உதைத்த தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி தி.மு.க., வடக்கு, தெற்கு என பிரித்து, இரண்டு நகர செயலர்களின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில், வடக்கு நகரத்திற்கு, குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் நகர செயலராக உள்ளார்.இதில், வடக்கில் உள்ள, 14வது வார்டில், கடந்த, 19ல் கிளை செயலர் விஸ்வநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மற்றொரு தரப்பினர் கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர். இதுகுறித்து கேட்ட, விஸ்வநாதனை, எதிர்தரப்பினர் தாக்கினர். அவர், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இந்த தகராறின் போது, விஜயகண்ணன் தரப்பை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், விஸ்வநாதன் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து, உடைக்கும் வீடியோ காட்சி, தற்போது பரவி வருகிறது. மேலும், விஸ்வநாதன், தி.மு.க., நிர்வாகி ஒருவரிடம் மொபைல் போனில் மனக்குமுறலுடன் பேசும் ஆடியோவும் பகிரப்பட்டு வருகிறது. அதில், 'கட்சியை பல ஆண்டுகளாக வளர்த்து வந்தேன். அ.தி.மு.க., கோட்டையாக இருந்த இந்த வார்டை, தி.மு.க., கோட்டையாக மாற்றினேன். எனக்கு தெரியாமல் கிளை கூட்டம் நடத்துகின்றனர். நேரில் சென்று கேட்டால் அடிக்கின்றனர். 'என் அலுவலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை காலால் எட்டி உதைக்கின்றனர். வரும் காலத்தில் தி.மு.க.,வின் நிலை, குமாரபாளையத்தில் என்னவாகும் என தெரியவில்லை. அராஜகம் அதிகமாகி விட்டது. கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பேசியுள்ளார்.இந்த வீடியோ, ஆடியோவால் குமாரபாளையம் தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் புகாரின்படி, குமாரபாளையம் போலீசார், நேற்று மாலை, முதல்வர் படத்தை அவமதித்ததாக, விஸ்வநாதன், 59, பிரபாகரன், 33, நாகராஜ், 28, அலெக்ஸாண்டர், 30, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mani
ஏப் 26, 2025 20:46

காளை அடக்கும் வீரம் கொண்ட தமிழ் மகன் . தப்பு என்று தெரிந்து பொறுத்துக் கொள்ள மாட்டான்.. தமிழ் மக்கள் சொத்தை தண்ணி என்று நினைத்து சுரண்டுபவர்களை . வேடிக்கை பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருப்பது


M Ramachandran
ஏப் 25, 2025 03:01

பெண்களுக்கு காட்டும் இலவசம். எளிதில் உணர்ச்சி படக்கூடியவர்கள் அதனால் நைசாக ஓட்டை உருவ முடியும். ஆனல் ஆண்களுக்கு சாரயா கடைகளை தாராளமாக திறந்து தள்ளாட வைத்துள்ளார்களெ.


R.MURALIKRISHNAN
ஏப் 24, 2025 21:02

அடுத்த வருட எலக்ஷன் ரிசல்ட்.


HoneyBee
ஏப் 24, 2025 16:45

இத‌ உள் கட்சி பிரச்சினை. செருப்பால் கூட அடித்து கொள்வார்கள்.. நமக்கு என்ன


Venkateswaran Rajaram
ஏப் 24, 2025 13:33

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 24, 2025 11:48

ஆனாலும் இங்கே எழுதுறவனெல்லாம் விடியலுக்கு பல்லுப்படாம .....


Yasararafath
ஏப் 24, 2025 11:29

இவர் செய்தது சரி தான். பெண்களை வைத்து திமுக ஆட்சி செய்கிறது. எதற்கெடுத்தாலும் பெண்களுக்கு இலவசம்.ஆண்களுக்கு இலவசமே இல்லை.


ponssasi
ஏப் 24, 2025 14:45

அதனால் தான் டாஸ்மார்க் வழக்கில் பெண்களை முன்னிறுத்தி வழக்கை சட்டவிரோதம் என கொண்டுசெல்லப்பார்த்தது


G Mahalingam
ஏப் 24, 2025 09:59

திமுககாரனுக்கே ஸ்டாலினை பிடிக்க வில்லை. மக்களும் எட்டி உதைக்கிற காலம் 2026 ஆண்டு நடக்கும்


Yes your honor
ஏப் 24, 2025 09:58

முதல்வர் படத்தை அவமதித்ததாக, விஸ்வநாதன், 59, பிரபாகரன், 33, நாகராஜ், 28, அலெக்ஸாண்டர், 30, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். - தமிழக பொலிஸாரின் வீர தீர சாதனைகளில் இதுவும் ஒரு மைல்கல். இந்த அசகாய சூரர் பொலிஸாருக்கு பாவம் அமாவாசையின் தம்பி அசோக், ஆபாசமுடி இவர்களெல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். விஸ்வநாதன், நாகராஜ் தான் கண்ணுக்குத் தெரிவார்கள். அலெக்ஸாண்டரை கூட விட்டு விடுவார்கள், ஏனெனில் பேரிலேயே ஓட்டு இருக்கிறதே. இதெல்லாம் ஒரு ஆட்சி.


VENKATASUBRAMANIAN
ஏப் 24, 2025 08:24

இதுதான் ஆரம்பம். விடியல் ஆட்சியின் முடிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை