உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நாமக்கல், நாமக்கல்-ராமாபுரம்புதுார் சாலை, குட்டைமேல தெருவில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். அதன்பின், முதற்கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சித்தி விநாயகருக்கு, இரண்டாம் கால மங்கள பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை, 7:30 மணிக்கு விமான கோபுர மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதில், கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை