உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு அதிக வாடகை ஏலம் கேட்காமல் ஒதுங்கிய சிறு வணிகர்கள்

பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு அதிக வாடகை ஏலம் கேட்காமல் ஒதுங்கிய சிறு வணிகர்கள்

பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு அதிக வாடகைஏலம் கேட்காமல் ஒதுங்கிய சிறு வணிகர்கள்நாமக்கல், அக். 5-பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு அரசு அதிக வாடகையை நிர்ணயம் செய்ததால், வணிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், விரைவில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில், 57 கடைகள், இரண்டு ஓட்டல்கள், டூவீலர் மற்றும் கார் ஸ்டாண்ட், மூன்று கட்டண கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவை, நேற்று ஏலம் விடப்பட்டது. இதற்கான ஒப்பந்த புள்ளி நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் பெறப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும், டிபாஸிட் மற்றும் கூடுதல் டிபாஸிட் என, நான்கு லட்சம் ரூபாய், வியாபாரிகள் டிபாஸிட் செய்து, ஏலத்தில் பங்கேற்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை:மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட, நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கான ஏலம், நாமக்கல் மாநகராட்சியில், கமிஷனர் மகேஸ்வரி முன்னிலையில், நேற்று நடந்தது. ஏலம் நியாயமான முறையில் நடந்தாலும், கடைகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை மிக அதிகமாக இருந்ததால், அதிர்ச்சியடைந்த வணிகர்கள் பலர், ஏலம் கேட்க தயங்கி விலகி கொண்டனர். பஸ் ஸ்டாண்ட் கடைகள் என்பது சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரம்.இதில் வசதி படைத்தோரும், ஆர்வம் மிகுதியில் புதியவர்களும் போட்டிபோட்டு அதிக வாடகைக்கு ஏலம் கேட்டதால், சிறு வணிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். ஆரம்பத்தில், 3 முறை ஏல அறிவிப்பு வெளியிட்ட போது, டிபாஸிட் தொகை ஒரு கடைக்கு, 2 லட்சம் ரூபாயாக இருந்தது. நான்காவது முறை ஏல அறிவிப்பு வெளியிடும் போது, டிபாஸிட் தொகை, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று நடந்த ஏலத்தில், மாத வாடகை, சேவை வரி, 18 சதவீதம் உட்பட, 15,000, 20,000 ரூபாய் என, இரு பிரிவுகளில் அரசு நிர்ணயம் செய்தது.இது சாமானிய வணிகர்களால் கட்ட இயலாத வாடகை. எனவே, வணிகர்கள் பலர் ஏலம் கேட்க ஆர்வமின்றி வெளியேறினர். இந்த வாடகை நிர்ணயம் மற்றும் வாடகை குறைப்பு தொடர்பாக அரசு பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை