கோரிக்கைகளுக்கு தீர்வு காண தீர்வு டிஜிட்டல் சேவை
நாமக்கல்:நாமக்கல்லில், மாற்றுத்திறனாளிகள், வருவாய், கூட்டுறவு, தொழிலாளர், மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் திலீப், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து, 1,236 பயனாளிகளுக்கு, 4.63 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் வகையில், 'தீர்வு எனும் மக்களுக்கான டிஜிட்டல் சேவை தளம்' செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை இருந்த இடத்திலிருந்து பதிவிடும் வகையில், எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும், 'தீர்வு - மக்களுக்கான டிஜிட்டல் சேவை' மூலம், தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்து தீர்வு காணலாம்.மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு--2027ல், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு, வரும், 31 வரை நடக்கிறது. வரும், ஆக., 1 முதல், 30 வரை, வீடுகள்தோறும் சென்று, வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ.,க்கள் சரவணன், கண்ணன், ஆர்.டி.ஓ., சாந்தி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.