மேலும் செய்திகள்
சேந்தமங்கலத்தில் எஸ்.பி., ஆய்வு
24-Aug-2025
பள்ளிப்பாளையம்: திருச்செங்கோடு அருகே, அணிமூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்-ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? விற்பனை செய்யப்படுகிறதா? எனவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கைது செய்-யப்பட்டவர்களின் வீடுகளிலும், நேற்று மாவட்ட எஸ்.பி., விமலா ஆய்வுமேற்கொண்டார். அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல்களை போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு, திருச்செங்கோடு மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் உடனிருந்-தனர்.
24-Aug-2025