உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் கேதார கவுரி சிறப்பு பூஜை

நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் கேதார கவுரி சிறப்பு பூஜை

நாமக்கல், நவ. 2-ஐப்பசி அமாவாசையையொட்டி, நாமக்கல் நாயுடுகள் நலச்சங்கம் சார்பில், கேதார கவுரி விரத பூஜை நடந்தது. கடந்த, 12ல் இருந்து தொடர்ந்து, 21 நாட்கள் விரதம் மேற்கொண்ட பெண்கள், நேற்று விரதத்தை முடித்துக்கொண்டனர்.அதையொட்டி, நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள கோட்டை பஜனை மடத்தில் அலங்கரிக்கப்பட்ட அர்த்தனாரி சுவாமி, பார்வதி தேவி முன், காலை, 7:30 மணிக்கு கேதார கவுரி பூஜை துவங்கி, மாலை, 3:00 மணி வரை வாழை இலையில் மஞ்சள் விநாயகர், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, அதிரசம், அரளி பூ, வாழைப்பழம் ஆகியவை வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, அனைவருக்கம் நோன்பு கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. கேதார கவுரி விரத பூஜையில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை