மேலும் செய்திகள்
கொங்கண சித்தர் குகையில் குருவார சிறப்பு பூஜை
18-Jul-2025
மல்லசமுத்திரம்: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று ஆடி மாத, 4ம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.தொடர்ந்து, கோவில் உட்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
18-Jul-2025