வெங்கரை அம்மனுக்கு நாளை சித்திரை கட்டளை சிறப்பு பூஜை
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கரையில் பிரசித்தி பெற்ற வெங்கரை அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று சிறப்பு கட்டளை பூஜை, அபிஷேகம் நடக்கிறது. அதேபோல் நடப்-பண்டு, நாளை காலை, 7:00 மணிக்கு வெங்கரையில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம், பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், காலை, 11:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம் உள்பட, 18 வகை-யான வாசனை திரவியங்களால் அபிஷேகம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு வெங்கரையம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை கட்டளை விழா ஏற்பாடுகளை பக்தர்கள், ஊர்பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து, 46ம் ஆண்டாக வெங்கரையம்மனுக்கு சித்திரை கட்டளை பூஜை நடப்-பது குறிப்பிடத்தக்கது.