உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய கிணற்றில் இறந்த புள்ளிமான் மீட்பு

விவசாய கிணற்றில் இறந்த புள்ளிமான் மீட்பு

மோகனுார், நாமக்கல், வளையப்பட்டி அடுத்த ஆலாம்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், நாமக்கல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர், கிணற்றில் இறந்து மிதந்துகிடந்த புள்ளிமானை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நாமக்கல் மாவட்டம், அரூர், ஆலாம்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இரவு நேரத்தில் தண்ணீர் தேடியோ அல்லது வழிதவறியோ வந்த புள்ளிமான், கிணற்றில் விழுந்து இறந்ததா அல்லது தெருநாய்கள் விரட்டியபோது, தப்பி வந்த மான், கிணற்றில் விழுந்து இறந்ததா என, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி