மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
29-Oct-2025
ப.வேலுார், : பரமத்தியில் உள்ள இடும்பன் குளம் அருகே வசிக்கும் புள்ளிமான்கள் அங்கிருந்து வெளியேறி, சில நாட்களாக, பரமத்தி வேலுார் பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து வருருகின்றன. இந்நிலையில், பரமத்தி அருகே, பில்லுார் கிராமத்தில் புள்ளிமான் ஒன்று மட்டும், நேற்று முன்தினம் சுற்றி திரிந்தது. இதை கண்ட தெரு நாய்கள், புள்ளி மானை துரத்தியபோது வேகமாக ஓடிய புள்ளிமான், அப்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது.வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள், 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி, கயிறு கட்டி புள்ளி மானை, ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டு, நாமக்கல் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
29-Oct-2025