நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்ட முகாம்
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அடுத்துள்ள தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் துர்க்கா மூர்த்தி தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., மாதேஸ்வரன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். வட்டார மருத்துவ அலுவலர் அருள்குகன் தலைமையில், நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உயரம், எடை ஆகியவற்றை அளந்து தேவைப்படும் மருத்துவ உதவிக்கு அந்தந்த சிறப்பு மருத்துவரின் ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டனர். காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், உள்ளிட்ட கருவிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.