எருமப்பட்டியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
எருமப்பட்டி, எருமப்பட்டி டவுன் பஞ்., பழனி நகரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை நடக்கிறது. முகாமில் கலெக்டர் துர்காமூர்த்தி, எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் புகார் மனுக்களை வாங்குகின்றனர்.எனவே, எருமப்பட்டி டவுன் பஞ்., மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் முகாமில் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, கலைஞர் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை கேட்பது உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்களை கொடுக்கலாம் என செயல் அலுவலர் நாகேஷ் தெரிவித்தார்.