மேலும் செய்திகள்
மாவட்ட எறிபந்து போட்டி 24 அணிகள் பங்கேற்பு
10-Oct-2024
மாவட்ட ஹாக்கி போட்டி; அரசு பள்ளி வெற்றி
06-Nov-2024
மாநில எறிபந்து போட்டி: அணியாபுரம் பள்ளி தேர்வுமோகனுார், நவ. 6-மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு, அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தகுதி பெற்று சாதனை படைத்தது.நாமக்கல் மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடந்தது. மாவட்டத்தில் இருந்து, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், மல்லசமுத்திரம், மோகனுார், ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, எட்டு வட்ட அளவில் நடந்த போட்டியில், முதலிடம் பிடித்த அணிகள் கலந்து கொண்டன.அதில், இறுதி போட்டியில், மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியும், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் விளையாடின. முடிவில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் புனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியசாமி, செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
10-Oct-2024
06-Nov-2024